சென்னை : பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, அத்தியாவசிய பொருட்களான, முக கவசம் மற்றும் கிருமி நாசினி கிடைப்பதை உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள்: 30 நிமிடம் தாமதமாக துவங்க உத்தரவு